குளிர்பானத்தில் மது கலந்து இளம்பெண்ணை பலாத்காரம்… 3 பேரை கைது செய்தது சேலம் போலீஸ்

- in சமூக சீர்கேடு, டாப் நியூஸ்
58
Comments Off on குளிர்பானத்தில் மது கலந்து இளம்பெண்ணை பலாத்காரம்… 3 பேரை கைது செய்தது சேலம் போலீஸ்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கணவனால் கைவிடப்பட்ட இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக போலீஸார் 3 பேரை கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பகுதியை சேர்ந்த இளம்பெண். இவர் கணவனால் கைவிடபட்டவர். தனது தாத்தாவின் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு வாய்பேசமுடியாத தனது தாயுடன் வந்துள்ளார். அப்போது பக்கத்து படுக்கையில் இருந்த நோயாளியின் உறவினரான நைவின்மாலிக் என்பவர் இந்த பெண்ணுக்கு உதவி செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கம் காரணமாக, அடிக்கடி இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டனர். ஆசை வார்த்தை இந்தநிலையில் நைவின்மாலிக் அந்த பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி கடந்த 29-ஆம் தேதி சேலத்துக்கு வரவழைத்துள்ளார்.

அன்றைய தினம் முழுவதும் அண்ணா பூங்கா, குரும்பப்பட்டி வன உயிரியல்பூங்கா மற்றும் ஏற்காட்டிற்கு சென்றுள்ளனர். தங்கும் விடுதியில் அப்போது நைவின்மாலிக் தனது சகோதரர் நவீஸ் மற்றும் நண்பர் ரஞ்சித் ஆகியோரை அறிமுகப்படுத்தியுள்ளார். அன்றைய தினம் இரவு சேலம் சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். பலாத்காரம் அப்போது நைவின்மாலிக் குளிர்பானத்தில் மதுவை கலந்து அந்த பெண்ணுக்கு கொடுத்து குடிக்க வைத்துள்ளார். அதன்பிறகு மதுபோதையில் இருந்த அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நைவின்மாலிக் பின்னர் தனது சகோதரர் நவீஸ் மற்றும் ரஞ்சித் ஆகியோரையும் அழைத்துள்ளார்.

Facebook Comments

You may also like

பெரிய மாநிலங்களில் மோடி அரசு மீது கடும் அதிருப்தி- தமிழகத்தில் எதிர்ப்பு அலை விஸ்வரூபம்- சர்வே

டெல்லி: நாட்டின் மிகப் பெரிய மாநிலங்களில் பிரதமர் மோடி அரசு