குட்கா விவகாரம் : டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக கோரி ஜெ.அன்பழகன் தலைமையில் திமுகவினர் பேரணி

- in டாப் நியூஸ்
86
Comments Off on குட்கா விவகாரம் : டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக கோரி ஜெ.அன்பழகன் தலைமையில் திமுகவினர் பேரணி

சென்னை: டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக கோரி ஜெ.அன்பழகன் தலைமையில் திமுகவினர் பேரணியில் ஈடுபட்டனர். பேரணியின் போது டிஜிபி பதவி விலக வேண்டும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக டிஜிபி அலுவலகதை முற்றுகையிட போவதாக வந்த தகவலை அடுத்து ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டனர்.

டிஜிபி அலுவலகத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக வந்த தகவலையடுத்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. குட்கா ஊழில் சுகாதாரத்துறை அமைச்சர், டிஜிபி உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக வருமான வரித்துறை சோதனையின் போது கிடைத்த டைரியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் மிக முக்கியமான குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன். இவர் மீது கடந்த 2016-ம் ஆண்டு புகார் எழுந்தது. இந்நிலையில் இவர் பதவி விலக வேண்டும் என்று பல முக்கிய அமைப்புகள் இன்று டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக டிஜிபி தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்