குஜராத் துணை முதல்வர் ராஜினாமா முடிவு?

- in டாப் நியூஸ்
136
Comments Off on குஜராத் துணை முதல்வர் ராஜினாமா முடிவு?

காந்திநகர் : குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதை அடுத்து, அம்மாநில முதல்வராக மீண்டும் விஜய் ரூபானியே தேர்வு செய்யப்பட்டார். முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக நிதின் பட்டேலும் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டு, நேற்று (டிச.,29) காந்திநகரில் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில், கடந்த முறை நிதின் பட்டேலிடம் இருந்த முக்கிய இலாக்காக்கள் ஆன நிதித்துறை, நகர்புற வளர்ச்சி துறை மற்றும் பெட்ரோலியம் துறைகள் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

நிதித்துறை, நிதின் பட்டேலை விட இளையவரான சவுரப் பட்டேலிடம் வழங்கப்பட்டுள்ளது. நகர்புற வளர்ச்சி துறை மற்றும் பெட்ரோலிய துறைகளை முதல்வர் ரூபானி தன்வசம் வைத்துக் கொண்டுள்ளார். இது போன்ற பல காரணங்களால் துணை முதல்வர் நிதின் பட்டேல் அதிருப்தியில் உள்ளார். அமைச்சரவையில் 2வது இடமான நிதித்துறை தம்மிடம் இருந்து பறிக்கப்பட்டது மிகுந்த அவமானமாக அவர் கருதுகிறார்.

இது குறித்து நிதின் பட்டேலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டதில் தலைமை மீது துணை முதல்வர் கடும் அதிருப்தியில் உள்ளார். தன்னிடம் இருந்த பறிக்கப்பட்ட துறைகள் 2 நாட்களுக்குள் தனக்கே மீண்டும் வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் ராஜினாமா செய்ய உள்ளார். தனது சுயமரியாதை பாதிக்கப்படும் இடத்தில் தான் இருக்க விரும்பவில்லை என அவர் தனது முடிவில் பிடிவாதமாக உள்ளார் என்கிறது.

துணை முதல்வரின் ராஜினாமா முடிவு பற்றி அதிகாரிகள் தரப்பில் மவுனம் காக்கப்படுகிறது. அதே சமயம் குஜராத் மாநில பா.ஜ., தலைவர் ஜிது வகானி கூறுகையில், எனக்கு தெரிந்த வரையில் கட்சி தலைவர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அப்படி ஏதாவது பிரச்னை இருந்தால் அது உடனடியாக தீர்த்து வைக்கப்படும் என்றார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்