கிரண்பேடி, ஆளுநரா அல்லது எதிர்க்கட்சி தலைவரா என தெரியவில்லை-நாராயணசாமி

- in டாப் நியூஸ்
126
Comments Off on கிரண்பேடி, ஆளுநரா அல்லது எதிர்க்கட்சி தலைவரா என தெரியவில்லை-நாராயணசாமி
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடும் மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில்  நாராயணசாமி செய்தியார்களிடம் கூறுகையில்,
உண்மைக்கு புறம்பான செயல்களை செய்வது, கிரண்பேடிக்கு வாடிக்கையாகிவிட்டது.  இதுகுறித்து கிரண்பேடிக்கு பலமுறை கடிதம் எழுதியும் அரசின் நடவடிக்கைகளில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறார். கிரண்பேடி, ஆளுநரா அல்லது எதிர்க்கட்சி தலைவரா என தெரியவில்லை, இதற்கு முடிவு எட்டும் காலம் விரைவில் வரும்.
புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி போட்டி அரசாங்கம் நடத்துகிறாரா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். ஆளுநர் கிரண்பேடியின் அறிக்கைகளும் செயல்பாடுகளும் அரசுக்கு எதிராக உள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில்  தலையிட்டு கிரண்பேடி குழப்பம் விளைவிக்கிறார்.  புதுச்சேரியில் பில் தராமல் வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்