கியூபா நாட்டின் புரட்சியாளருமான, முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோவின் நினைவிடத்திற்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அஞ்சலி

- in டாப் நியூஸ்
52
Comments Off on கியூபா நாட்டின் புரட்சியாளருமான, முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோவின் நினைவிடத்திற்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அஞ்சலி
கியூபா நாட்டின் புரட்சியாளருமான, முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோவின் நினைவிடத்திற்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்தினார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் மத்திய அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு கிரீஸ், சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று கியூபா சென்றடைந்தார். அந்நாட்டிற்கு வந்திறங்கிய அவரை மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதனையடுத்து, அவர் தனது மனைவியுடன் அந்நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதன் மூலம் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய முதல் பெண் என்ற பெருமையை சவிதா கோவிந்த் பெற்றார்.

c
இதைத்தொடர்ந்து, ராம்நாத் கோவிந்த் அந்நாட்டு அதிபரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேசவுள்ளார். மேலும், அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அவர் அஞ்சலி செலுத்த உள்ளார்.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்