காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான சண்டையில் இரு பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு

- in டாப் நியூஸ்
65
Comments Off on காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான சண்டையில் இரு பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு
ஸ்ரீநகர்,
புல்வாமா மாவட்டம் லாம் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் காணப்படுவதாக தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட போது பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்பு இடையே நடைபெற்ற சண்டையில் இரு ராணுவ வீரர்கள் காயம் அடைந்தார்கள். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியிலே உயிரிழந்துவிட்டனர். சண்டையில் ஒரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டான் என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்கள் ராணுவ வீரர் அஜய் மற்றும் மாநில போலீஸ் படையை சேர்ந்த லாதீத் குஜ்ரி என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். வனப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்