காவிரி விவகாரம்….பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம், இதுவரை எந்த பதிலும் வரவில்லை : முதலமைச்சர் பழனிசாமி

- in டாப் நியூஸ்
102
Comments Off on காவிரி விவகாரம்….பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம், இதுவரை எந்த பதிலும் வரவில்லை : முதலமைச்சர் பழனிசாமி

சேலம்: அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் சேர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பிரதமரை சந்திக்க அனுப்பப்பட்ட தீர்மானத்திற்கு இதுவரை பதிலில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலம் அண்ணா பூங்காவின் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு 80 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள மணிமண்டபத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் விதித்த 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கப்படாததால் உடனடியாக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ததாக முதலமைச்சர் கூறினார். அதன்படி வருகின்ற 3-ம் தேதிக்குள் வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நம்பிக்கை சேர்த்துள்ளது என்றார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்