காவிரி என்ன என் பாக்கெட்டிலா இருக்கு? அமைச்சர் சர்ச்சை பேச்சு!

- in டாப் நியூஸ்
56
Comments Off on காவிரி என்ன என் பாக்கெட்டிலா இருக்கு? அமைச்சர் சர்ச்சை பேச்சு!
தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த ஆண்டும் தண்ணீர் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை கூட்டத்தொடரில் தெரிவித்தார்.
இந்நிலையில், அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த வெற்றி விழாவில் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்றார்.
அப்போது அவர் பின்வருமாறு பேசினார், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ள நிலையில் அணையை திறக்க வேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. மேட்டூர் அணையை நினைத்தபோது திறப்பதற்கு காவிரி தண்ணீர் என் பாக்கெட்டிலா இருக்கிறது என அவர் கேட்டது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்