காதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன்! பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு

- in அந்தரங்கம்
214
Comments Off on காதலியுடன் தகாத புகைப்படத்தை வெளியிட்ட காதலன்! பின்னர் யுவதியின் எடுத்த விபரீத முடிவு

வென்னப்புவ பகுதியில் யுவதி ஒருவரிடம் நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் யுவதி ஒருவரை யுவன் ஒருவர் காதலித்துள்ளார்.காதலித்த சந்த்பர்ப்பத்தில் குறித்த இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர்.

இருவரும் பல சந்தர்ப்பங்கள் உடல் உறவு கொண்டதாகவும், அதனை காதலன் தனது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த இருவரின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.பெற்றோர் காதலுக்கு முழுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியதோடு யுவதியையும் காதலனை விட்டு பிரியுமாறு பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

பெற்றோரின் கோரிக்கைக்கு அமைய யுவதியும் காதலனை விட்டு பிரிய தீர்மானித்ததோடு தனது காதலனிடமும் பிரிய போவதாக தெரிவித்துள்ளார்.

காதலியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட காதலன் சிறிது காலம் சென்றதும் பதிவு செய்யப்பட்டுள்ள குறித்த காணொளியை இணையத்தளத்திற்கு பதிவேற்றம் செய்யவுள்ளதாக அச்சுறுத்தியுள்ளார்.தனக்கு பணம் தரும் பட்சத்தில் குறித்த காணொளியை அழித்துவிடுவேன் எனவும் அறிவித்துள்ளார்.

இவ்வாறு நீண்ட நாட்களாக குறித்த யுவதியிடம் பணம் பெற்றுக்கொண்டு வந்துள்ளார்.இதற்கமைய அவர் யுவதியிடமிருந்து 1129400.00 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டுள்ளார்.

பணத்தினை பெற்றுக்கொண்டாலும் சிறிது காலத்தின் பின்னர் குறித்த காணொளி காட்சியை அவர் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனை அறிந்துக்கொண்ட யுவதி பெற்றோரிடம் தெரிவித்தமையை தொடர்ந்து பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.குறித்த முறைப்பாட்டினை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் இளைஞரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments

You may also like

மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா ?

இரகசியகேள்வி-பதில்:கேள்வி: என் நண்பர் ஒருவர். மது அருந்தி விட்டு உடலுறவில்