காங்கிரஸ் கமல் கூட்டணியா ! ராகுல் போட்ட ட்வீட் !

- in டாப் நியூஸ்
62
Comments Off on காங்கிரஸ் கமல் கூட்டணியா ! ராகுல் போட்ட ட்வீட் !
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை நடிகரும் மக்கள் நீதி கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று மாலை டெல்லியில் சந்தித்து பேசினார் என்பதை சற்றுமுன் பார்த்தோம். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு இன்று இரு தரப்பினர்களும் கூறி வந்தாலும் வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட ஒரு அஸ்திவாரமாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கூறியபோது ‘காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தொடர்பாகவும் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கமல்ஹாசனிடம் பேசினேன் என்று பதிவு செய்துள்ளார்.

அதேபோல் ராகுல்காந்தியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ‘காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்து ராகுல் காந்தியிடம் எதுவும் பேசவில்லை என்றும், காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் குறித்து பேசியதாகவும், தமிழகத்தின் அரசியல் குறித்து அவரிடம் கலந்தாலோசித்ததாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Rahul Gandhi

@RahulGandhi

Enjoyed meeting @ikamalhaasan in Delhi today. We discussed a wide range of issues concerning our two parties, including the political situation in Tamil Nadu.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்