கஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு

- in சமூக சீர்கேடு, சினிமா, டாப் நியூஸ்
86
Comments Off on கஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு
நடிகர் கஸ்தூரிக்கும், விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது.

நடிகர் கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து பல கருத்துகளை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில், இலங்கை படுகொலையை நினைவு படுத்தும் விதமாக, மே 18ம் தேதி தனது முகநுல் பக்கத்தில் “விழுந்தோம் இழந்தோம் எழுவோம் எனத் தொடங்கும் ஒரு கவிதையை பதிவு செய்திருந்தார். அதை தனது டிவிட்டர் பக்கத்திலும் டேக் செய்திருந்தார்.
இதில் திமுக குறித்து இவர் எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை. ஆனாலும், இலங்கையில் லட்சக்கணக்கானோர் கொலை செய்யப்பட காரணமாக திமுக-காங்கிரஸ் கட்சிகள் இருக்கிறது என அந்த கவிதையில் கூறப்பட்டதாக கருதிய திமுக விசுவாசி ஒருவர் கஸ்தூரியை தரக்குறைவாக விமர்சித்தார்.

அதைக்கண்ட கஸ்தூரி, கழக கண்மணி, தமிழகத்தின் தூண், தி தி சொ என ஒரு பதிவை போட்டார். இதன் பின் கஸ்தூரியின் டிவிட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்களுக்கும், அந்த திமுக விசுவாசிக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டு களோபரமாகியது.

 

Facebook Comments

You may also like

அது வேற.. இது வேற.. எஸ்.வி.சேகருடன் கடம்பூர் ராஜூ செல்பி

அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூவின் குடும்ப திருமண விழாவில் எஸ்.வி.சேகர்