கல்வீச்சில் ஈடுபடுவோரை சுட்டுக் கொல்ல வேண்டும்- பா.ஜ.க. எம்.பி சர்ச்சைப் பேச்சு

- in டாப் நியூஸ்
54
Comments Off on கல்வீச்சில் ஈடுபடுவோரை சுட்டுக் கொல்ல வேண்டும்- பா.ஜ.க. எம்.பி சர்ச்சைப் பேச்சு
ஜம்மு காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடுவோரை சுட்டுக் கொல்ல வேண்டும் எனஎம்.பி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவை சேர்ந்த எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் சர்ச்சைக்குரிய வகையில்  பேசுவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். பாஜக பிரமுகர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஏற்கனவே பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் அறிவுறுத்தியுள்ள நிலையிலும் சிலர் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக சுமார் 10 ஆயிரம் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை திரும்ப பெற மாநிலத்தை ஆளும் பிடிபி-பா.ஜ.க. கூட்டணி அரசு முடிவு செய்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க. எம்.பி வாட்ஸ், கல்வீச்சாளர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுவது தொடர்பான செய்தியை படித்தேன். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே கல்வீச்சில் ஈடுபடுவோரை சுட்டுக்கொல்ல வேண்டும் என கூறியிருக்கிறார். அவரது கருத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்