கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை !

- in டாப் நியூஸ்
42
Comments Off on கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை !
சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆட்சி அமைக்க தேவையான 8 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அந்த கட்சிக்கு கிடைக்கவில்லை. எனவே வெறும் 38 தொகுதிகளில் வெற்றி பெற்ற மதச்சார்ப்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆதரவுடன் அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலின்போது ஜெயநகர் தொகுதியின் பாஜக வேட்பாளர் பி.என்.விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் முடிந்துள்ள நிலையில் சற்றுமுன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் மரணம் அடைந்த விஜயகுமாரின் சகோதரர் பிரஹலாத் அவர்களூம், காங்கிரஸ் சார்பில் செளமியா ரெட்டியும் போட்டியிட்டனர்.

இந்த நிலையில் சற்றுமுன் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் முதல்கட்ட தகவலாக காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டி 3,749 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 3,322 வாக்குகளும் பெற்றுள்ளார். எனவே இப்போதைக்கு காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்