கர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்

- in டாப் நியூஸ்
340
Comments Off on கர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்
கர்நாடகாவில் நாய் ஒன்று ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் அமெரிக்க பிட்புல் வகையை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்தி வந்தார். இந்த நாய்க்கு அவர் ஈவா என பெயர் வைத்துள்ளார். கர்ப்பமாக இருந்த அந்த நாய்க்கு நேற்று பிரசவமானது. 36 மணி நேர இடைவெளியில் அந்த நாய் 21 குட்டிகளை ஈன்றது. அதில் 11 ஆண் குட்டிகளும் 10 பெண் குட்டிகளும் அடங்கும். ஆனால் பிறந்த உடனே 4 குட்டிகள் உயிரிழந்தது.
பிரிட்டனைச் சேர்ந்த நாய் ஒரே பிரசவத்தில் 24 குட்டிகளை ஈன்றது தான் கின்னஸ் சாதனை. அடுத்தபடியாக ஈவா 21 குட்டிகளை ஈன்று சாதனை படைத்துள்ளது.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்