கருணாநிதியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு

- in டாப் நியூஸ்
94
Comments Off on கருணாநிதியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு

சென்னை: 3வது அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.
மத்தியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு மாற்றாக 3வது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் முயற்சி செய்து வருகிறார். இது தொடர்பாக அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 3வது அணி தொடர்பாக மம்தாவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னை வந்த தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். முன்னதாக, கோபாலபுரத்தில் சந்திரசேகர ராவை, ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த சந்திப்புக்கு பிறகு, ஸ்டாலினை சந்தித்து 3வது அணி குறித்து ஆலோசனை நடத்தினார்.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்