கனடாவில் வேன் மோதிய விபத்தில் 10 பேர் பலி; 15 பேர் படுகாயம்

- in டாப் நியூஸ்
80
Comments Off on கனடாவில் வேன் மோதிய விபத்தில் 10 பேர் பலி; 15 பேர் படுகாயம்

டொரண்டோ,

கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் வாடகை வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பாதசாரிகள் செல்லும் கூட்டத்தில் புகுந்தது.  இந்த விபத்தில் சிக்கிய 10 பேர் பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் இந்த சம்பவம் விபத்து ஏற்படுத்தும் நோக்கத்தில் நடைபெறவில்லை எனவும், இந்த விசாரணை மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் தேடி வந்தனர்.

பின்னர் இந்த விபத்திற்கு காரணமான டொரண்டோவில் புறநகர் பகுதியான ரிச்மாண்ட் ஹில்லில் வசிக்கும் 25 வயதான அலெக்ஸ் மினாசியன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த விபத்தில் 10 பேர் இறந்தனர். மேலும் 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் உறுதியான அறிக்கையை வெளியிடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்