கந்துவட்டி பிரச்சனையில் பெண்ணை வீட்டிற்கு அழைத்த திமுக மா.செ கைது

- in டாப் நியூஸ்
71
Comments Off on கந்துவட்டி பிரச்சனையில் பெண்ணை வீட்டிற்கு அழைத்த திமுக மா.செ கைது
ஓசூரில் கந்துவட்டி பிரச்சனையில் பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் பேசியதோடு தனது வீட்டில் வந்து இருக்கும்படி கூறிய மாவட்ட துணைச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருப்பவர் சீனிவாசன். இவர் ஓசூரில் நிலம் தொடர்பான பிரச்சனையில் கட்டப்பஞ்சாயத்து செய்வது, கந்துவட்டிக்கு பணம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இவரிடம் ரவி என்பவர் மீட்டர் வட்டிக்கு ரூ.30 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஒருகட்டத்தில் ரவியால் வட்டி பணத்தை முழுமையாக கட்டி முடிக்க முடியவில்லை. உரிய நேரத்தில் பணம் கொடுக்க முடியாமல் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், ரவி மனைவியை சென்று சந்தித்துள்ளார். உன் கணவன் வட்டிக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு வட்டிப் பணம் கொடுக்க மட்டும் கசக்கிறதா? போன் போட்டால் போனை எடுக்க மாட்டேங்கிறான் என்றும் உன் கணவன் வட்டிப் பணத்தை தரும் வரை நீ என் வீட்டில் வந்து இரு என்றும் கூறியுள்ளார்.
மேலும், ரவி மனைவியிடம் சீனிவாசன் எல்லைமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரவி மனைவி இதுகுறித்து ஓசூர் டி.எஸ்.பி.யிடம் கதறியுள்ளார். இதையடுத்து விசாரணை நடத்தி சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டி.எஸ்.பி மீனாட்சியின் இந்த அதிரடி நடவடிக்கையால் பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்