கதாநாயகி வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருத்தமில்லை: நடிகை இனியா

- in Featured, சினிமா
62
Comments Off on கதாநாயகி வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருத்தமில்லை: நடிகை இனியா

கதாநாயகி வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருத்தமில்லை என நடிகை இனியா தெரிவித்திருக்கிறார்.

தீபாவளியையொட்டி வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘திரைக்கு வராத கதை’. இதில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் இனியா. தொடர்ந்து தெலுங்கு, மலையாளப் படங்களிலும் இனியா நடித்து வருகிறார்.

இது குறித்து நடிகை இனியா கூறுகையில் “சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காதது பற்றி நான் பெரிதாக நினைக்கவில்லை. நல்ல வேடங்களில் நடிக்கும் நடிகையாக நீண்டகாலம் சினிமாவில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். எனவே அழுத்தமான பாத்திரங்களில் விரும்பி நடிக்கிறேன்.

இப்போது தமிழில் ‘பொட்டு’, காதல் சொல்ல நேரமில்லை, ‘ரெண்டாவது படம்’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’, உள்பட பல படங்களில் நடிக்கிறேன். இந்த படங்களில் குறைவான நேரம் வந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பேன்.

படம் பார்த்து விட்டு வரும் ரசிகர்களின் மனதில் நான் நடித்த பாத்திரம் நிற்க வேண்டும். இதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும். இதனால் என்னை படத்தில் நடிக்க அழைக்க வரும் இயக்குனர்களிடம் கதை கேட்டு நல்ல வேடங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். சொன்னவுடன் எல்லா படங்களிலும் நடிப்பதில்லை” என்றார்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி