கண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்? ஸ்டாலினை கலாய்த்த ராம்தாஸ்

- in டாப் நியூஸ்
399
Comments Off on கண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்? ஸ்டாலினை கலாய்த்த ராம்தாஸ்
டாக்டர் ராம்தாஸ், சமூக வலைத்தளமான டுவிட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் அரசியல்வாதிகளில் ஒருவர். தனது டுவிட்டர் பக்கத்தில் சமூக அவலங்களை வெளிப்படுத்துதல் முதல் பிற அரசியல்வாதிகளை கலாய்ப்பது வரை அவரது டுவீட்டுக்கள் காரசாரமாக இருக்கும் என்பது அவரது ஃபாலோயர்களுக்கு தெரிந்ததே
இந்த நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்க்கும் வகையில் இன்று அவர் டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கண்ணாடியை திருப்பி வைத்தால் ஆட்டோ ஸ்டார்ட் ஆகும் என்ற அஜித் பட நகைச்சுவைக்கு அடுத்தப்படியாக, ஆகச் சிறந்த மூட நம்பிக்கை என்பது சுக்கிரபுத்திரி யாகம் நடத்தினால் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்பது தான்! என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் ஸ்ரீரங்கம் கோவில் சென்ற மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சராக யாகம் செய்ததாக வெளிவந்த செய்தியினை குறிப்பிட்டு டாக்டர் ராமதாஸ் இந்த டுவீட்டை பதிவு செய்துள்ளார். கண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும் என்ற கருணாஸ் வசனத்தை நினைவுபடுத்தும் இந்த டுவீட்டை நெட்டிசன்கள் ரசித்து வருகின்றனர்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்