கடவுள் உயிர் கொடுப்பார் என மூன்று நாள் சடலத்தை புதைக்காமல் வைத்திருந்த குடும்பத்தினர் !

- in டாப் நியூஸ்
61
Comments Off on கடவுள் உயிர் கொடுப்பார் என மூன்று நாள் சடலத்தை புதைக்காமல் வைத்திருந்த குடும்பத்தினர் !
ஆந்திர மாநிலத்தில் கடவுள் மீண்டும் உயிர் கொடுப்பார், அதன் மூலம் மீண்டும் உயிர்த்தெழுவார் என ஒரு பெண்ணின் பிணத்தை அவரது குடும்பத்தினர் 3 நாட்களாக புதைக்காமல் வீட்டில் வைத்திருந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ஜங்கரெட்டிகுடம் என்ற பகுதியில் வாழ்ந்து வந்த அருணா ஜோதி என்ற 41 வயது பெண் சமீபத்தில் மரணம் அடைந்தார். ஆனால் அவரது மரணத்தை வெளியே சொல்லாமல் அவரது குடும்பத்தினர் மறைத்துவிட்டனர்.
அருணாவுக்கு கடவுள் உயிர் கொடுப்பார் என்றும் அவர் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார் என்றும் நம்பி அருணாவின் குடும்பத்தினர் பிணத்தை புதைக்காமல் வீட்டிலேயே 3 நாட்கள் வைத்திருந்தனர். ஆனால் அக்கம் பக்கத்துவீட்டுக்கு துர்வாடை அடித்ததன் காரணமாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அருணாவின் வீட்டிற்கு வந்தபோது, அந்த வீட்டில் உள்ளவர்கள் ஒரு இறப்பு நடந்த வீட்டில் உள்ளவர்கள் போல் இல்லாமல் இயல்பாக இருந்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை செய்தபோது அருணா இறந்துவிட்டாலும் மீண்டும் கடவுளின் அருளால் உயிர்த்தெழுவார் என்று கூறினர். அதன்பின்னர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை வந்தால்தான் அருணாவின் இறப்புக்கான காரணம் தெரியும் என்றும் அதன்பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்