ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

- in ஸ்மைல் ப்ளீஸ்
71
Comments Off on ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. முதல்வருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வருக்கு எதிராக வாக்களித்த தற்போதைய துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட 11 பேரை தகுதிநீக்கம் செய்ய கோரி தி.மு.க கொறடா சக்கரபாணி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்; 18-ஆம் தேதி அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்துக்கு எதிராக தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்கு அளித்தனர்.இந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் களாக நீடிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். சபாநாயகரின் நிர்வாக முடிவில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.