ஓலா காரில் பெண்ணை நிர்வாணமாக்கி பாலியல் துன்புறுத்தல்

- in சமூக சீர்கேடு, டாப் நியூஸ்
125
Comments Off on ஓலா காரில் பெண்ணை நிர்வாணமாக்கி பாலியல் துன்புறுத்தல்
பெங்களூரில் ஓலா காரில் பயணம் செய்த பெண் ஒருவரை அந்த கார் டிரைவர், நிர்வாணமாக்கி மோசமான முறையில் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்

பெங்களூரை சேர்ந்த  பெண் ஒருவர் கடந்த ஜூன் 1ம் தேதி ஏர்போர்ட் செல்வதற்காக அதிகாலை 2 மணியளவில் ஓலா வாகனத்தில் பயணித்துள்ளார். பயணத்தின் போது கார் டிரைவர் வேறு வழியில் சென்றதால் அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து டிரைவரிடம் அந்த பெண்  கேட்டபோது, அவன் ஷார்ட் கட்டில் பயணிப்பதாக மலுப்பிவிட்டான்.
இதன் பின்னர் டிரைவர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வண்டியை ஒட்டி சென்றதால் அதிர்ச்சியடைந்த பெண் காரின் கதவை திறக்க முயற்சித்துள்ளார். ஆனால், கார் சைல்ட் லாக் வசதியின் மூலம் அடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த பெண் காரில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். அப்போது டிரைவர் அந்த பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டான். பின்னர் அந்தப் பெண்னை அவளது ஆடைகளை கலைக்க சொல்லி மிரட்டி, அவளை நிர்வணமாக புகைப்படம் எடுத்து பாலியல் ரீதியாக நிறைய தொல்லைகள் கொடுத்து உள்ளான்.
இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க அந்த பெண் டிரைவரிடம் என்னை ஏர்போர்ட்டில் விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளார். இதையடுத்து, அந்த டிரைவர் போலீசுக்கு இது குறித்து ஏதாவது தகவல் தெரிவித்தால் உன்னுடைய நிர்வாண புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளான்.  பின்னர் சாதூர்யமாக அவனிடம் இருந்து தப்பித்த அந்த பெண்  தனக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து பெங்களூர் கமிஷ்னரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அந்த டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும். அவனது காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவசரத்திற்காக பயன்படுத்தப்படும் இம்மாதிரி சேவைகளால் பல இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாம் போகிறது.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்