ஓடும் காரில் பள்ளி மாணவிக்கு பாலியல் கொடுமை வகுப்புத் தோழர்களே அத்துமீறிய கொடூரம்

- in டாப் நியூஸ்
75
Comments Off on ஓடும் காரில் பள்ளி மாணவிக்கு பாலியல் கொடுமை வகுப்புத் தோழர்களே அத்துமீறிய கொடூரம்
நொய்டா
கிரியேட்டர் நொய்டாவில் உள்ள தனியார் பள்ளியில், 11- ம் வகுப்பு படித்து வந்த
மாணவி ஒருவர் கடந்த வாரம், புதன்கிழமை பள்ளி முடிந்து வெளியில் வந்தார். வழக்கமாகச் செல்லும் பள்ளி வேனைத் தவறவிட்டார். இதனால், வீட்டுக்குச் செல்ல வழியில்லாமல் தவித்தார். பிறகு நடந்து அவர், வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாகக் காரில் மாணவியின் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர்  வந்தார். காரை நிறுத்திய அவர், மாணவிவை அழைத்துக் கொண்டு சென்றார். காரில் மாணவியின் வகுப்புத் தோழனின் நண்பர்கள் இரண்டு பேர் இருந்துள்ளனர். மொத்தம் நான்கு பேர் அந்தக் காரில் பயணித்துள்ளனர்.
கார் வேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது மாணவியிடம் அவர்கள் அத்துமீறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் காரை நிறுத்தும்படி மாணவி கூறியுள்ளார். ஆனால், அவரது அபயக்குரல் யாருக்கும் கேட்கவில்லை. காரில் இருந்தவர்கள் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மூன்று மணி நேரத்துக்குப் பிறகு மாணவியை காரிலிருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
சாலையின் ஓரத்தில் மயங்கிக் கிடந்த மாணவியை அவ்வழியாகச் சென்றவர்கள் மீட்டுள்ளனர். தொடர்ந்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார், மாணவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அதன்பிறகு அவரிடம் விசாரித்துள்ளனர். விசாரணையில் மாணவி, காரில் நடந்த முழு விவரத்தையும் சொல்லியிருக்கிறார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `காரில் மாணவியை அழைத்துக் கொண்டு சென்ற அவரது வகுப்புத் தோழன், அவருடைய நண்பர்கள் அவரை போதைப் பொருளைச் சாப்பிட கட்டாயப்படுத்தியுள்ளனர். அப்போது, அவர்களிடம் மாணவி போராடி தோற்றுப்போய் உள்ளார். அதன் பிறகுதான் மாணவிக்கு அந்தக் கொடுமை நடந்துள்ளது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மாணவியின் பள்ளித்தோழன், அவருடைய நண்பர்கள் என மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். இதில் இரண்டு பேர் இன்று எங்களிடம் சிக்கியுள்ளனர். ஒருவர் மட்டும் தலைமறைவாக இருக்கிறார்’ என்றனர்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்