ஒவ்வொரு பெண்ணையும் அரசு தனித்தனியாக பாதுகாக்க முடியாது என பாஜக மகளிரணி தலைவி பேட்டி !

- in டாப் நியூஸ்
50
Comments Off on ஒவ்வொரு பெண்ணையும் அரசு தனித்தனியாக பாதுகாக்க முடியாது என பாஜக மகளிரணி தலைவி பேட்டி !
ஒவ்வொரு பெண்ணையும் அரசு தனித்தனியாக பாதுகாக்க முடியாது என பாஜக  மகளிரணி தலைவி சுலக்சனா சாவத் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 25-ந் தேதி கோவா கடற்கரையில் பெண் ஒருவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுகுறித்து சுலக்சனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் அளித்த அர்த்தமற்ற பதில் பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசால் ஒவ்வொரு பெண்ணிற்கும் பாதுகாப்பு வழங்க முடியாது. மேலும் எல்லாவற்றையும் அரசு தான் செய்ய வேண்டும் என்ற மக்களின் மனநிலையை மாற்றவேண்டும் என்று சுலக்சனா கூறியுள்ளார்.
சுலக்சனாவின் இந்த கருத்திற்கு கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை. எனவே சுலக்சனா கூறிய அர்த்தமற்ற கருத்திற்க்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பலர் கூறி வருகின்றனர்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்