ஒரே நிமிடத்தில் 19 உடைகளை மாற்றி புதிய உலக சாதனை! (வீடியோ)

- in வினோதங்கள்
123
Comments Off on ஒரே நிமிடத்தில் 19 உடைகளை மாற்றி புதிய உலக சாதனை! (வீடியோ)

சீனாவில் ஒருவாரகால தேசிய விடுமுறை விரைவில் வரவுள்ள நிலையில் மக்களை மகிழ்விக்க இங்குள்ள பொழுதுப்போக்கு பூங்காக்கள் போட்டிப்போட்டு கொண்டு புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

அவ்வகையில், ஹுபேய் மாகாண தலைநகரான உஹான் நகரில் உள்ள ’ஹேப்பி வேல்லி’ பொழுதுப்போக்குப் பூங்காவில் ஒரு புதிய சிறப்பம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சில் பங்கேற்ற மலேசியா நாட்டைச் சேர்ந்த இரு மேஜிக் பெண்கள் ஒரே நிமிடத்தில் 18 உடைகளை மாற்றி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

மேடையின் தோன்றும்போது அணிந்திருந்த கருப்புநிற உடையுடன் சேர்த்து மொத்தம் 19 உடைகளில் ஒரு பெண் தோன்ற, மற்றொரு பெண் ஒரு உறைபோன்ற திரையால் மறைத்தபடி, அடுத்தடுத்து உடைகளை மாற்றுவதில் அவருக்கு உதவி செய்கிறார்.

இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், முதல் உடையை அணிந்திருந்த எந்த அடையாளமும் அடுத்த உடைக்கு மாறும்போது பார்வையாளர்களுக்கு தெரியவில்லை என்பதுதான்.

இறுதியாக பத்தொன்பதாவது உடையான வெள்ளைநிற அங்கியில் அந்தப் பெண் தோன்றும்போது, சரிகை காகிததால் அவரது உதவியாளர் குளிப்பாட்டும் காட்சி

மலேசியாவை சேர்ந்த அவேரி சின் மற்றும் சில்வியா லிம் ஆகியோர் ஒரே நிமிடத்துக்குள் நடத்திகாட்டிய இந்த சாகச நிகழ்ச்சி முந்தைய உலக சாதனையையும் முறியடித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

அந்த சாகச வீடியோவைக் காண..,

Facebook Comments

You may also like

தரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ!

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடேவின் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில்