ஒரு வெங்காயத்தை வைத்து வெறுப்பேற்றிய பிக்பாஸ் !

- in சினிமா
97
Comments Off on ஒரு வெங்காயத்தை வைத்து வெறுப்பேற்றிய பிக்பாஸ் !
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி மொக்கையாக இருந்ததாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
நேற்றைய நிகழ்ச்சியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கேரட்டில் வெங்காயம் போடலாமா? வேண்டாமா? என்ற சர்ச்சைதான் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களிடையே இருந்தது.
கேரட் பொறியலில் வெங்காயம் போட வேண்டும் என்று பாலாஜி, மும்தாஜ், மகத், யாஷிகா, ஐஸ்வர்யா உள்பட அனைவரும் கூறினர். ஆனால் சமையல் டீமில் உள்ள நித்யா, வெங்காயத்தை போட முடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதனால் பொறியல் ஒருசிலருக்கு கிடைக்காமல் போனதால் சண்டையாக மாறியது.

மும்தாஜ் உள்பட அனைவரும் சேர்ந்து கொண்டு நித்யாவை ரவுண்டு கட்ட நித்யா பரிதாபமாக இருந்தார். ஆனால் இதை எதையுமே கண்டுகொள்ளாமல் பொன்னம்பலம் ஒரு ஓரத்தில் தூங்கி கொண்டிருந்தார் என்பதும், இந்த பிரச்சனையில் யாருக்கும் ஆதரவாக கருத்து கூறாமல் பாலாஜி அமைதியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரட்டில் வெங்காயம் என்ற சின்ன பிரச்சனையை வைத்து நேற்றைய நிகழ்ச்சியை கிட்டதட்ட முடித்துவிட்டதால் நிகழ்ச்சியை நெட்டிசன்கள் டிரோல் செய்து வருகின்றனர்.

 

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி