ஒரு வழியாக கர்நாடக அமைச்சரவை பிரச்சனை முடிவுக்கு வந்தது !

- in டாப் நியூஸ்
42
Comments Off on ஒரு வழியாக கர்நாடக அமைச்சரவை பிரச்சனை முடிவுக்கு வந்தது !
கடந்த மே மாதம் 12 ஆம் தேதி கர்நாடக தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர் 15 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் – கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்தது. 

இதன் பின், மஜத மாநில தலைவர் குமாரசாமி முதல்வராகவும் காங்கிரஸை சேர்ந்த பரமேஷ்வர் துணை முதல்வராகவும் கடந்த 23 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.
ஆனால், அமைச்சரவை பகிர்வு குறித்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தது. முதலில் காங்கிரஸ் மற்றும் மஜக இடையே சில குழப்பம் ஏற்பட்டது. அதன் பின்னர் காங்கிரச் கட்சிக்குள்ளேயே சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், இவை அனைத்தும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இரு கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி அமைச்சரவை பகிர்வு குறித்து முடிவெடுத்துள்ளனர்.
அதன் படி, காங்கிரஸ் சார்பில் 17 பேரும், மஜத சார்பில் 9 பேரும் அமைச்சர்களாக இன்று பதவியேற்க உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்கவுள்ள அமைச்சர்கள் யார் யார் என்ற பட்டியல் வெளியாகவில்லை.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்