ஐ.பி.எல். போட்டிகளை நேசிக்கும் தென் ஆப்பிரிக்க வீரர்கள்: டிவில்லியர்ஸ் பெருமிதம்

- in Sports
353
Comments Off on ஐ.பி.எல். போட்டிகளை நேசிக்கும் தென் ஆப்பிரிக்க வீரர்கள்: டிவில்லியர்ஸ் பெருமிதம்

ஐ.பி.எல். போட்டிகளை தென்ஆப்பிரிக்க வீரர்கள் அதிக அளவில் நேசிப்பதாக அந்த நாட்டை சேர்ந்த முன்னணி வீரர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

நடப்பு ஆண்டில் 15 தென்ஆப்பிரிக்க வீரர்கள் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வருவதாக கூறும் டிவில்லியர்ஸ், இதன்மூலம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் உணர்வு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டி மூலம் எங்களது ஆட்டம் புதிய லெவலுக்கு சென்றுள்ளது என கூறும் டிவில்லியர்ஸ், தென்ஆப்பிரிக்காவின் பெரும்பாலான முன்னணி வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் ஆடுகிறார்கள் என்றார்.

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை இதற்காக பாராட்டுவதாக தெரிவித்துள்ள அவர், தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்ததால் தான் எங்களால் ஐ.பி.எல். போட்டியில் ஆட முடிகிறது. எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக தென்ஆப்பிரிக்க வாரியத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

தென்ஆப்பிரிக்க வீரர்களில் டெல்லி அணியில் 4 வீரர்களும் (குயின்டன் டிகாக், டுமினி, கிறிஸ் மோரிஸ், இம்ரான் தாகீர்),

பெங்களூர் அணியில் 3 வீரர்களும் (டிவில்லியர்ஸ்,டேவிட் வைஸ், தபரிஷ் சம்சி),

பஞ்சாப் அணியில் 3 வீரர்கலும் (மில்லர், அபோட், பெகருதீன்),

புனே அணியில் (டுபெலிசிஸ், அல்பி மார்கல்), குஜராத் (ஸ்டெயின்), மும்பை இந்தியன்ஸ் (மெர்ச்சன்ட் டிலான்சே),

கொல்கத்தா (மார்னே மார்கல்) அணிகளில் தலா ஒருவரும் ஆடி வருகிறார்கள்

Facebook Comments