ஐபிஎல் டி20 லீக் : மும்பை அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி

- in கிரிக்கெட்
29
Comments Off on ஐபிஎல் டி20 லீக் : மும்பை அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி

மும்பை: மும்பை அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.4  ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்து 118 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினர். தவான் 5 ரன் மட்டுமே எடுத்து மெக்லநாகன் வேகத்தில் கிளீன் போல்டாகி வெளியேற, அடுத்து வந்த விருத்திமான் சாஹா டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். மணிஷ் பாண்டே 16 ரன் எடுத்து ஹர்திக் பந்துவீச்சில் ரோகித் வசம் பிடிபட, ஷாகிப் ஹசன் 2 ரன்னில் ரன் அவுட்டானது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி.

இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமி்றங்கியது. இறுதியில் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து, 87 ரன்களை மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது.

Facebook Comments

You may also like

தேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி

இந்திய அணியில் விளையாடும் வீரர்களின் உடற்தகுதியை சரிபார்க்க இந்திய கிரிக்கெட்