ஐபிஎல் டி20 போட்டி : ஐதராபாத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…புள்ளி பட்டியலில் முதல் இடம்

- in கிரிக்கெட்
58
Comments Off on ஐபிஎல் டி20 போட்டி : ஐதராபாத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…புள்ளி பட்டியலில் முதல் இடம்

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 62, ஹேல்ஸ் 40 ரன்கள் எடுத்தனர்.

இதனையடுத்து ராஜஸ்தான் அணி 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஐதராபாத்தின் கட்டுகோப்பான பந்து வீச்சால் ராஜஸ்தான் அணி சிறிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு புறம் தனியாளாக ரஹானே போராடினார். ஆனால் இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரஹானே 65 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.

Facebook Comments

You may also like

தேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி

இந்திய அணியில் விளையாடும் வீரர்களின் உடற்தகுதியை சரிபார்க்க இந்திய கிரிக்கெட்