எல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி ?

- in சினிமா
1305
Comments Off on எல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி ?
பிக்பாஸ் சீசன் 2 போட்டி முதல் சீசன் அளவிற்கு பெரும் வரவேற்பு பெறவில்லை. இதில் ஆரம்பம் முதலே பாலாஜிக்கும் அவர் மனைவிக்கும் பிரச்சனையை  தூண்டி விடுவது போல் காட்டி வருகின்றனர். ஆனால், அதுவே மக்களுக்கு கொஞ்சம் சலிப்பை தருவதாக உள்ளது. 
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் எபிஸோட்டிற்கான புரோமா வீடியோ வெளியிடுவது வழக்கம். அதன்படி,  நேற்றைய விஜய் டிவி முதல் புரோமோ வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் ஜனனி ஐயர் ஆண் வேடமிட்டு ஐஸ்வர்யாவுக்கு முத்தம் கொடுப்பது போல்  காண்பிக்கப்பட்டது.
நேற்றைய நிகழ்ச்சியில் ரெமோ பாடலை போட்டதும் ஐஸ்வர்யா தத்தா ஆண் போல் மாறி ஜனனியை கலாய்க்க தொடங்கினார், ஜனனி நீ என்னை  காதலிக்கிறாயா? என்று கேட்க, அதற்கு ஐஸ்வர்யா முதலில் உதட்டில் முத்தல் கொடு என்றார். அதை தொடர்ந்து ஜனனியும் உதட்டில் முத்தம் கொடுக்க, பார்த்தவர்களுக்கு என்னடா நடக்குது இங்க? என்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி சண்டையை தாண்டி கிளாமரிலும் பிக்பாஸ் தற்போது ஸ்கோர் செய்ய  ஆரம்பித்திருக்கிறார் போலும். இதற்கு ஐஸ்வர்யா வைத்த பெயர் தான் ஹைலேட், முத்தா டேஸ்டிங் என்று புது வார்த்தையை அறிமுகம் செய்துள்ளார்.
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி நம் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி