ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.இதற்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்தது. இதில் பாக்., வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். மேலும் 3 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதுடன், அந்நாட்டு ராணுவ முகாம்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
என்கவுன்டர்
காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் ரோந்து சென்ற ராணுவ வீரர்கள் வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து, அந்த பகுதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர். தொடர்ந்து, அந்த பகுதியில் இரு தரப்பிற்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. அந்த பகுதியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 பேர் பதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன