என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள் -சஞ்சிதா சானு ஆவேசம்

- in Sports
123
Comments Off on என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள் -சஞ்சிதா சானு ஆவேசம்
ஊக்க மருந்துப் புகாரில் சிக்கியிருக்கும் இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு, தன் மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டுள்ளதாகவும், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்று கூறியுள்ளார்.
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் மணிப்பூரைச் சேர்ந்த  பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு(24) 53 கிலோ உடல் எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில் சஞ்சிதா சானுவிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்திருப்பதாகவும், இதனால் சஞ்சிதா சானு  இடைநீக்கம் செய்யப்பட்டு, தேசிய பயிற்சி முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்தாகவும்  சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் அறிவித்திருந்தது.
lift
இதுகுறித்து விளக்கமளித்துள்ள சஞ்சிதா சானு, தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை நான் எடுத்து கொள்ளவில்லை. என் மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டுள்ளது. என்னை இடைநீக்கம் செய்ததை எதிர்த்து இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் ஆதரவுடன் மேல் முறையீடு செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

Facebook Comments

You may also like

துனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டம்