ஊட்டி பேருந்து விபத்து – பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

- in டாப் நியூஸ்
70
Comments Off on ஊட்டி பேருந்து விபத்து – பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
நீலகரி மாவட்டம் ஊட்டி அருகே அரசு பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், பலி எண்ணிக்கை 7 லிருந்து 9 ஆக அதிகரித்துள்ளது.
ஊட்டி அருகே மந்தடா என்ற கிராமத்திற்கு 34 பயணிகளுடன் அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள அபாயகரமான சாலையில் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து 220 அடி மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
dead
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வருபர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இறந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்