உலமா கூட்டத்தில் தற்கொலைப்படை தாக்குதல் ஆப்கானிஸ்தானில் பயங்கரம் !

- in டாப் நியூஸ்
63
Comments Off on உலமா கூட்டத்தில் தற்கொலைப்படை தாக்குதல் ஆப்கானிஸ்தானில் பயங்கரம் !
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று நடைபெற்ற மதத்தலைவர்கள் அமைதி குழு கூட்டத்தை குறிவைத்து நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். தலைநகர் காபுலில் உள்ள லோயா ஜிர்கா கூடாரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சுமார் 3 ஆயித்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டனர்.
கூட்டம் முடிந்து அனைவரும் வெளியேறும் வேளையில் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தலில் 7 பேர் உயிரிழந்தனர். சுமார் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலை கிடமாக உள்ளதாகவும். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்