உலக நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்துக்கு எதிராக செயல் பட வேண்டும் – சீன அதிபர்

- in டாப் நியூஸ்
54
Comments Off on உலக நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்துக்கு எதிராக செயல் பட வேண்டும் – சீன அதிபர்

பெய்ஜிங்: பயங்கரவாதம், பிரிவினைவாதம், போதை மருந்து வர்த்தகத்திற்கு எதிராக ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும் என சீன அதிபர் ஷி ஜிங்பிங் கூறியுள்ளார்.

கையெழுத்து

சீனாவின் குவிங்டா நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பயங்கரவாதம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர்,அந்த ஒப்பந்தத்தில் அனைத்து தலைவர்களும் கையெழுத்து போட்டனர். பின்னர் அனைவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அவசியம்

அப்போது சீன அதிபர் ஷி ஜிங்பிங் கூறுகையில், இன்று உலக நாடுகள் ஒவ்வொன்றும் சார்ந்துள்ளது அதிகரித்து வருகிறது. பொதுவான அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை யாரும் தனியாக எதிர்கொள்ள முடியாது. ஒற்றுமை மற்றும் கூட்டணி அதிகரிப்பதன் மூலமே, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை அதிகரிக்க முடியும். எஸ்சிஓ அமைப்பில் உள்ள நாடுகள் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனையை அதிகரிப்பது மிகவும் முக்கியமாகும்.

ஒப்பந்தம்

சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்னைகளை விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளோம். உறுப்பு நாடுகளின் நட்பு , ஒத்துழைப்பு, நீண்ட கால உறவுவை மேம்படுத்தும் வகையில், நீண்ட கால திட்டம் கொண்ட ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம். அனைவரும் பயங்கரவாதம், பிரிவினைவாதம், போதை மருந்து வர்த்தகத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்