உலகையே உலுக்கிய இந்திய கிராமத்தில் நடந்த சம்பவம்! மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரிதாபநிலை

- in சமூக சீர்கேடு
992
Comments Off on உலகையே உலுக்கிய இந்திய கிராமத்தில் நடந்த சம்பவம்! மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரிதாபநிலை

மேற்குவங்க மாநிலத்தில் குழந்தை கடத்தல்காரி என்ற வதந்தியால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் மூர்ஷிதாபாத் என்னும் மாவட்டத்தை சேர்ந்த ஓடேரா பிபி (42) என்ற பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார், இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.

இந்நிலையில், இவர் வழிதவறி பக்கத்து கிராமத்துக்கு சென்றுள்ளார், அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த ஒருபெண், பிபியை பார்த்து இவள் ஒரு குழந்தை கடத்தல்காரி, நமது கிராமத்தில் உள்ள குழந்தைகளை கடத்துவதற்கு வந்துள்ளார் எனவும் கூச்சலிட்டுள்ளார்.

இதனை கேட்ட கிராம மக்கள் அந்த பெண்ணை பிடித்து டிராக்டரில் கட்டிவைத்துள்ளனர், அதன் பின்னர் கிராம மக்கள் சேர்ந்து பிபியை அடித்துள்ளனர்.

இதில் வலி தாங்க முடியாமல் பிபி கதறியுள்ளார், இவரது ஆடைகளை அப்புறப்படுத்தி, தலைமுடியை வெட்டி மனிதாபிமானமின்றி அந்த கிராமத்து ஆண்கள் நடந்துகொண்டுள்ளனர்.

தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று பிபியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், ஆனால் சிகிச்சை பலனின்றி பிபி இறந்துவிட்டார்.

அந்தப் பெண்ணை அடித்தவர்கள் மீதும், அவரை பற்றி வதந்தி பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

பிபி அடித்துக் கொல்லப்பட்ட காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பகிர, உலகளவில் அந்த வீடியோ பரவி வருகிறது.

Facebook Comments

You may also like

மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்

தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த தனது நண்பனை, அப்பெண்ணின் கணவர்