உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு: மெரினா போராட்டம் சேப்பாக்கத்திற்கு மாற்றம்; வேல்முருகன்

- in டாப் நியூஸ்
90
Comments Off on உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு: மெரினா போராட்டம் சேப்பாக்கத்திற்கு மாற்றம்; வேல்முருகன்
சென்னை,
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்துவதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது.  உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் மற்றும் காயிதே மில்லத் மணிமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசாரின் முன் அனுமதி பெற்று நடத்தி கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதேபோன்று, விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரி மனு செய்துள்ளார்.  இதில், அவருக்கு “மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அய்யாக் கண்ணுவுக்கு ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்க வேண்டும்” என்று உயர் நீதிமன்ற நீதிபதி டி. ராஜா நேற்று உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனு மீது உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.  அதன் முடிவில், மெரினாவில் போராட்டம் நடத்த ஒரு நாள் அய்யாக்கண்ணுவுக்கு அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வள்ளுவர் கோட்டம் உள்பட அரசு குறிப்பிடும் 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை மனுதாரர் தேர்வு செய்து அங்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி புதிதாக மனு கொடுத்தால், அதை போலீசார் முறையாக பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மெரினாவில் போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ள நிலையில், தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் நடக்கவிருந்த போராட்டம் சேப்பாக்கத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.
இந்த போராட்டம் பற்றி வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, காவிரி விவகாரத்திற்காக சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
இதனால் மெரினாவில் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் நடைபெற இருந்த போராட்டம் சேப்பாக்கத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்