உத்திரபிரதேசத்தில் கடனைத் திரும்ப தராததால் கூலித் தொழிலாளியின் நாக்கை அறுத்த கொடூர சம்பவம் !

- in டாப் நியூஸ்
40
Comments Off on உத்திரபிரதேசத்தில் கடனைத் திரும்ப தராததால் கூலித் தொழிலாளியின் நாக்கை அறுத்த கொடூர சம்பவம் !
உத்திரபிரதேசத்தில் கடனைத் திரும்ப தராததால் கூலித் தொழிலாளியின் நாக்கை அறுத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் ராஜூ. கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் ராஜூ, அவர் வசிக்கும் பகுதியில் இருப்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய நாளிலிருந்து ராஜூ முறையாக வட்டியை செலுத்தி வந்துள்ளார். ஆனால் சில மாதங்களாக வேலை எதுவும் இல்லாததால், அவரால் முறையாக வட்டியை செலுத்த முடியவில்லை.
fund
இதனால் ராஜூவிற்கு பணம் கொடுத்தவர், பணத்தை திரும்ப தரும்படி, அவரை டார்ச்சர் செய்துள்ளார். ராஜூவும் எங்கெங்கேயோ முயற்சி செய்தும் அவரால் பணத்தை திரும்ப தர முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், ராஜூவின் நாக்கை அறுத்துள்ளார். வலிதாங்க முடியாத அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள அப்பகுதி போலீஸார், தலைமறைவாக உள்ள அந்த ஃபைனான்சியரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்