உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 6 சிறுமிகள் பலாத்காரம்: முதல்வர் ஆதித்யநாத் அரசு மீது புகார்

- in டாப் நியூஸ்
78
Comments Off on உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 6 சிறுமிகள் பலாத்காரம்: முதல்வர் ஆதித்யநாத் அரசு மீது புகார்

கனூஜ்: உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 6 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு மரண தண்டனை அளிக்க ஒருபுறம் மத்திய அரசு முயன்று வருகிறது. ஆனால் மறுபுறம் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன. கனூஜ் மாவட்டத்தில் 11 வயது சிறுமியை உறவினர் ஒருவரே பலாத்காரம் செய்துள்ளார்.

முசாஃபர் நகரில் தலைவலிக்கு சிகிச்சை பெற வந்த 13 வயது சிறுமியை மருத்துவர் ஒருவர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கியுள்ளார். ராம்பூர் மாவட்டத்தில் 7 வயதுடைய சிறுமி ஒருவரும் மயக்க மருந்து தரப்பட்டு மர்ம நபரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையில் புகார் தரப்பட்டுள்ளது. இவை தவிர முசாஃபர் நகர், விஷ்னுகர், சம்பள்டவுன் ஆகிய இடங்களில் 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 4 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. வடமாநிலங்களில் குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவது மத்திய அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்