உடல் தகுதி இல்லாதவர்களுக்கு, ‘லைசென்ஸ்’ : எம்.டி.சி.,யில் தான் இந்த கூத்து

- in ஸ்மைல் ப்ளீஸ்
104
Comments Off on உடல் தகுதி இல்லாதவர்களுக்கு, ‘லைசென்ஸ்’ : எம்.டி.சி.,யில் தான் இந்த கூத்து

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில், உடல் தகுதியில்லாதோரும், ‘புரோக்கர்’களின் கருணையால், ‘லைசென்ஸ்’ பெற்றுள்ளனர். இதனால், பயணியருக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் பலர், விபத்து உள்ளிட்ட காரணங்களால், உடல் தகுதியை இழந்து உள்ளனர்.அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களில் பலருக்கு, பேருந்தை இயக்கவோ, நெரிசலில் நின்று டிக்கெட் வழங்கவோ, உரிய உடல் தகுதி இல்லை என, சான்றளித்துள்ளனர்.

இதனை உறுதி செய்த, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின், உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவை வைத்து, ஊனத்தின் சதவீதத்தை கணக்கிட்டு, சான்று வழங்கி உள்ளன.இவ்வாறு பலர், பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மாற்றுப்பணி என்னும் இலகுப்பணியை வழங்க வேண்டிய கட்டாயம், மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினர், தங்களுக்கே இலகுப்பணிகளை வழங்க வேண்டும் என, நிர்வாகத்தை நிர்பந்தித்து வருகின்றனர். இதற்கு பணிந்து, தகுதியுடையோருக்கு மாற்றுப்பணிகளை வழங்க மறுத்து விடுகின்றனர்.

இந்நிலையில், பேருந்துகளை இயக்க, போதுமான பணியாளர்கள் இல்லாததால், உடல் தகுதி இல்லாதோரிடம், ‘லைசென்சை புதுப்பித்து வராவிட்டால், வேலையை இழக்க நேரிடும்’ என, மிரட்டுகின்றனர்.

இதனால், ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு வெளியில் உள்ள புரோக்கர்களிடம் சென்று, லைசென்ஸ் வாங்கி தருமாறு, அவர்கள் கோருகின்றனர். புரோக்கர்களும், கமிஷ னுக்கு ஆசைப்பட்டு, போலி மருத்துவ சான்றிதழ்களை வழங்கி, லைசென்சை புதுப்பித்து தந்து விடுகின்றனர். அவர்களுக்கு, உடல் தகுதி இருப்பதாக கூறி, பேருந்துகளை இயக்குமாறு, அதிகாரிகள் கட்டளை இடுகின்றனர். இன்னும் சிலரிடம், ‘உங்கள் லைசென்சை ரத்து செய்து வந்தால் தான், பணி வழங்குவோம்’ எனக் கூறுகின்றனர்.

அவ்வாறு ரத்து செய்வோருக்கு, கருணை அடிப்படையில் வேலை வழங்குவதாக, ஆவணங்களை தயாரித்து, பணி வழங்குகின்றனர். ஆனால், அவர்கள் புதிதாக வேலைக்கு சேர்ந்ததாகவே, கணக்கில் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறான முறைகேடுகளில் ஈடுபடாமல், ‘எனக்கு, உடல் தகுதி இல்லை; அதனால், மாற்றுப் பணி வழங்க வேண்டும்’ என்போருக்கு, எந்த பணியையும் வழங்காமல், பல ஆண்டுகளாக அலைக்கழிக்கின்றனர்.

மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் இந்த செயலால், பயணியருக்கு பாதுகாப்பில்லாத நிலை உருவாகி உள்ளது. உடல் திறன் பாதிக்கப்பட்டோரின் லைசென்ஸ்களை மறு ஆய்வு செய்ய, போக்கு வரத்து துறை செயலர்உத்தரவிட்டால் உண்மை தெரியும்.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.