ஈபிஎஸ் – ஓபிஎஸ் முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்த தேர்தல் கமிஷன்!

- in டாப் நியூஸ்
73
Comments Off on ஈபிஎஸ் – ஓபிஎஸ் முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்த தேர்தல் கமிஷன்!
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு, உள்கட்சி பூசல் காரணமாக அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்தனர். பின்னர், இரு அணிகளும் ஒன்றிணைந்தது. 

அதன் பின்னர், கட்சியின் சின்னமும் பெயரும் இவர்களுக்கே கிடைத்தது. இந்நிலையில் அதிமுகவில் சட்டவிதிகள் திருத்தம், செய்யப்பட்ட. இந்த திருத்தங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதாவது, புதிய சட்டவிதிகளின்படி கட்சியில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டுள்ளது அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சி ரீதியான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்தவர்களாக அவர்கள் இரண்டு பேருமே விளங்குகின்றனர்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்