இளைஞர்கள் பீடா கடை போடுங்கள்: முதல்வர் அறிவுறுத்தல்

- in டாப் நியூஸ்
44
Comments Off on இளைஞர்கள் பீடா கடை போடுங்கள்: முதல்வர் அறிவுறுத்தல்

அகர்தலா: இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக அரசியல்வாதிகள் பின்னால் அலைவதை விட்டு விட்டு பீடா கடை போடுங்கள் என திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் கூறி உள்ளார்.
தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: இளைஞர்கள் அரசாங்க வேலை க்காக அரசியல் வாதிகள் பின்னால் அலையும் நிலையில் உள்ளனர். இது இளைஞர்களின் பொன்னான நேரத்தை வீணடிப்பதாக உள்ளது. விவசாயம் பண்ணுவது, கோழி ,பன்றி வளர்ப்பு தொழில்களை துவங்குவது தங்களுடைய தகுதி குறைந்து விடும் என்ற எண்ணம் படித்த இளைஞர்கள் மத்தியில் உள்ளது . மேலும் அவர்கள் அரசியல் வாதிகள் பின்னால் அலையாமல் பீடா கடை வைத்திருந்தால் அவர்களுடைய வங்கி கணக்கில் குறைந்த பட்சம் ரூ.5 லட்சம் இருந்திருக்கும். மேலும் இளைஞர்கள் பால்மாடு வளர்த்திருந்தால், 10 ஆண்டுகளில் அவரது வங்கி இருப்பு ரூ.10 லட்சமாக இருந்திருக்கும்.

முதல்வர் பிப்லப் குமார் தேவ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகாபாரத காலத்தில் திருதிராஷ்டிரர்மூலமாக இண்டர் நெட் பயன்படுத்தப்பட்டு வந்தது. எனவும் முன்னாள் உலக அழகி டயானா ஹை டன் அழகானவர் அல்ல வியாபார நோக்கத்திற்காக அவருக்கு உலக அழகி பட்டம் தரப்பட்டது. சிவில் இன்ஜினியரிங் படிப்பு படித்தவர்கள் ஆட்சியர் பணிகளுக்கு வர வேண்டும். என பரபரப்பான கருத்துக்களை கூறி வம்பில் மாட்டிக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்