இரண்டாம் புரட்சி தலைவர்: டிடிவி தினகரன் அட்ராசிட்டி!

- in டாப் நியூஸ்
53
Comments Off on இரண்டாம் புரட்சி தலைவர்: டிடிவி தினகரன் அட்ராசிட்டி!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுக கட்சி நிலையற்று கிடக்கிறது. முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இணைந்து கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வருகின்றனர். 

சசிகலாவின் சகோதரரான டிடிவி தினகரன் கட்சியையும் ஆட்சியையும் மீட்பேன் என கூறி புதிய கட்சி ஒன்றை துவங்கி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
இந்நிலையில், கட்சியின் தலைமை அலுவலகத்தை சென்னை அசோக் நகரில் சமீபத்தில் திறந்தார். அவர் மீதுள்ள அதிருப்தியில் அலுவலக திறப்பு விழாவை சில முக்கியமானோர் புறக்கணித்தனர்.
ஆனாலும், இவை எதையும் வெளியில் காட்டமல் தினகரன் வழக்கம் போல் தனது பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். மேலும், கட்சியின் நிர்வாகிகளுக்கு சில உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறாராம்.
அதாவது, கட்சி விழாக்கள் மற்றும் பொதுக் கூட்டங்களிள் தினகரன் கலந்துகொள்ளும் போது, அவரை வரவேற்று அழைக்கும் போஸ்டர்களிலும், பேனர்களிலும், ‘இரண்டாம் புரட்சி தலைவரே! என குறிப்பிடும்படி கட்டளையிட்டுள்ளாரா.
இனி தினகரன் கட்சி சார்ப்பில் அடிக்கப்படும் போஸ்டர் மற்றும் பேனர்களில் இரண்டாம் புரட்சி தலைவரே என்பதை அடிக்கடி பார்க்ககூடும்.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்