இரட்டை குழந்தைகள் வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

- in பல்சுவை
544
Comments Off on இரட்டை குழந்தைகள் வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

தந்தையிடமிருந்து வரும் ஆயிரக்கணக்கான விந்து(Sperm) செல்களில் ஒரே ஒரு விந்து செல்லானது தாயின் கர்ப்பப்பையில் உள்ள கருவுடன் (Egg) இணைந்து கரு முட்டை உருவாகிறது.
மற்ற விந்து செல்கள் அழிந்துவிடுகின்றன. இந்த கரு முட்டையானது சிறிது நாட்களில் மொருலாவாக(Morula) மாறுகிறது.

அதாவது ஆண், பெண் அணுக்கள்(Sperm and Egg) இணைந்த கரு முட்டை இரண்டு இரண்டாக பிரிந்து கொண்டே சென்று, ஆயிரக்கணக்கான செல்கள் கொண்ட கரு முட்டையாக காணப்படும்.

இந்த ஆயிரக்கணக்கான செல்கள் கொன்ற கரு முட்டையே மொருலா எனப்படும்.

மொருலாவானது மேலும் வளர்ச்சியடையும் போது மொருலாவின் குறிப்பிட்ட பகுதிகள் குறிப்பிட்ட குழந்தையின் உடல் உறுப்புகளாக மாறுகிறது.

மொருலாவின் உறுப்புகளின் வளர்ச்சி தோன்றுவதற்கு முன்னதாகவே மொருலாவானது இரண்டாக பிரியுமானால், பிரிந்த இரண்டு மொருலாவும் வளர்சியடைந்து இரண்டு குழந்தைகளாக மாறுகிறது. இரண்டு மட்டும் இன்றி பத்து வரை குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.

இரட்டை குழந்தைகள் பிறக்க வேண்டுமா?

இரட்டை குழந்தைகள் பிறக்க மரபணு மற்றும் காரணமில்லை, நாம் உட்கொள்ளும் உணவுகளும் ஒருவகை காரணமாக அமைகிறது.

என்னென்ன உணவுகள்

கிழங்கில் அதிகமாக பைட்டோ எஸ்ட்ரோஜென் (phytoestrogens) மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் (progesterone) இருக்கிறது.

அது கருப்பையில் அதிகமாக முட்டையை தங்க வைக்க உதவும். அதனால் தான் அதிகமாக கிழங்கு சாப்பிட்டால் இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் உண்டு.

பால்பொருட்களில் அதிகமாக கால்சியம் சத்து உள்ளதால் எலும்புகளுக்கு நல்லது, அதுமட்டுமல்லாமல் இனப்பெருக்க மண்டலத்திற்கும் நல்லது.

லாங் ஐலேண்ட் ஜெவிஸ் மருத்துவ நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர், கேரி ஸ்டேன்மேன், குறைவாக பால் பொருட்களை உண்ணும் பெண்களை விட ஐந்து மடங்கு அதிகமாக, அதிக அளவு பால் பொருட்களை உண்ணும் பெண்களுக்கே இரட்டை குழந்தைகள் பிறக்கின்றனர் என்று கூறுகிறார்.

விட்டமின் 9 என அழைக்கப்படும் போலிக் ஆசிட் நிறைந்த காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

இந்த போலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் 40% இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த மருத்துவ குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது. மேலும், இது கரு வளர்ச்சிக்கும் சிறந்தது.

கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கும் உணவுப்பொருட்களான தானியங்கள், பீன்ஸ் போன்றவற்றை உட்கொண்டால் கரு முட்டையின் அளவு அதிகரிக்கும்.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.