இன்று முதல் தமிழ் மொழியில் ரயில் டிக்கெட்டுகள்

- in டாப் நியூஸ்
112
Comments Off on இன்று முதல் தமிழ் மொழியில் ரயில் டிக்கெட்டுகள்
ரயில் பயண டிக்கெட்டுக்களில் இதுவரை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பயணம் ஆரம்பிக்கும் இடம் மற்றும் பயணம் முடியும் இடம் குறித்த தகவல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று முதல் இந்த ஊரின் பெயர்கள் தமிழிலும் தகவல்கள் இடம்பெறும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து ரயில் பயணியர் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினராக உள்ள ஆசீர்வாதம் ஆச்சாரி என்பவ்ர் கூறியதாவது:
 இது அன்னை தமிழுக்கு தலை மகனின் காணிக்கை. நீண்ட முயற்சிக்குப் பிறகு ரயில்வே டிக்கெட்டுகளில் தமிழ் வந்துவிட்டது. முயற்சி திருவினையாகியது என்றுதான் சொல்ல வேண்டும்.
தெற்கு ரயில்வேயின் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் டிக்கெட்டுகளில் இனி தமிழ் மொழியும் இடம்பெறும். இதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து இன்று முதல் இரண்டு தினங்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் சோதனை நடைபெறும். அதன் பிறகு இவ்வார இறுதி முதல், அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.
பல மாதங்களுக்கான தொடர் முயற்சியின் காரணமாக கிடைத்த இந்த வெற்றியை தமிழன்னையின் பொற்பாதங்களில் காணிக்கையாக்குகிறேன். மாதிரி ரயில் டிக்கெட்டில் என் அன்னைத் தமிழைக் கண்டு இன்று ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்.
ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினராக நான் செய்த மிகப் பெரிய பணி இதுவே. என்னை இப்பணியில் ஈடுபடுத்திய பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசியத் தலைவர் அமீத் ஷா, அரசு அதிகாரியாக இருந்த என்னை அரசியலுக்கு அறிமுகம் செய்த என் ஆசான் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோருக்கும், இந்தக் குறிப்பிட்ட திட்டத்தை செயல்படுத்த ஆணை பிறப்பித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் என் நன்றிகள்
இவ்வாறு ஆசிர்வாதம் ஆச்சாரி தெரிவித்துள்ளார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்