இன்னும் ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் திறக்க வாய்ப்பு ?

- in டாப் நியூஸ்
57
Comments Off on இன்னும் ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் திறக்க வாய்ப்பு ?
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. 

ஆனாலும், நீதிமன்றத்தை நாடி இந்த ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பிருக்கிறது என செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், தற்போது இன்னும் ஓரிரு மாதங்களில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகளும், தொண்டு நிறுவனங்களும்தான் காரணம். இன்னும், ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் அமைதி திரும்ப காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆலை முழுவதுமாக மூடப்பட்டு விட்டது. அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இனிமேல் யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்