இந்த சமயத்தில் அறிக்கை எதுவும் வெளியிடப்போவதில்லை: நடிகர் கமல்ஹாசன்

- in Featured, சினிமா
80
Comments Off on இந்த சமயத்தில் அறிக்கை எதுவும் வெளியிடப்போவதில்லை: நடிகர் கமல்ஹாசன்

கவுதமி பிரிவு குறித்து இந்த சமயத்தில் அறிக்கை எதுவும் வெளியிடப் போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசனும், கவுதமியும் கடந்த 13 ஆண்டு காலமாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவரை விட்டு பிரிவதாக நடிகை கவுதமி நேற்று அறிவித்தார்.

கவுதமி பிரிவு குறித்து கமல் அறிக்கை வெளியிட்டதாக வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல், கவுதமி பிரிவு குறித்து தான் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து கமல் கூறுகையில் “இத்தருணத்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை” என தெரிவித்திருக்கிறார்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி