இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்! புற்றுநோயாக இருக்கலாம்

- in மருத்துவம்
158
Comments Off on இந்த அறிகுறிகள் தென்பட்டால் தயவு செய்து தாமதிக்காதீர்கள்! புற்றுநோயாக இருக்கலாம்

எந்தவொரு உயிரனமும் மூச்சு விடாமல் வாழ முடியாது. அந்த மூச்சு காற்றை இழுத்து வெளியில் விடுவதற்கு பயன்படும் முக்கிய உறுப்பு தான் நுரையீரல்.

இந்த நுரையீரலில் உள்ள திசுக்களில் கட்டுப்பாடற்ற உயிரணு வளர்ச்சி ஏற்படுவதே நுரையீரல் புற்றுநோய் எனப்படுகிறது.

இந்த நோய் ஒருவருக்கு இருப்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

மூச்சுத் திணறல்

இந்த நோயின் முதன்மையான அறிகுறியே மூச்சு திணறல் தான். ஒருவருக்கு மூச்சு விடுவதில் சிரமமாக இருந்தால் அதுவும் முக்கியமாக காலையில் தூங்கி எழுந்த பின் அதிக சிரமம் இருந்தால் மருத்துவரை உடனே அணுகுதல் நலம்.

உடல் சோர்வு

ஒருவருக்கு அடிக்கடி உடல் சோர்வடைவதோ அல்லது இரவில் தூக்கமின்மை பிரச்சனையோ ஏற்ப்பட்டால் அது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

இருமல், சளி, ஜலதோஷம்

சளிக்கும் நுரையீரலுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்புண்டு. ஒருவருக்கு தொடர்ந்து சளி, இருமல் தொல்லை இருந்து வந்தால் உடனே மருத்துவரிடம் சோதனை செய்து கொள்வது அவசியம். இது கூட நுரையீரல் புற்றுநோயின் முக்கிய அறிகுறி தான்!

குரலில் பிரச்சினை

குரலடைப்பு, தொண்டைகம்மல் போன்ற விடயங்கள் அதிகம் புகைப்பிடிப்பவர்களுக்கு பொதுவாக இருந்தாலும் இந்த பிரச்சனை 3 வாரங்களையும் தாண்டி தாண்டி தொடர்ந்தால் அது நுரையீரல் கோளாறுக்கான அறிகுறியாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

விழுங்குவதில் சிக்கல்

எந்தவொரு உணவையோ அல்லது தண்ணீரையோ அருந்தும் போது அதை விழுங்குகையில் தொண்டையில் வலியோ அல்லது அடைப்பது போல தோன்றினால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

நெஞ்சு வலி

Adenocarcinoma என்பது நுரையீரல் புற்றுநோயின் ஒரு வகையாகும். இது பெரும்பாலும் பெண்களையே தாக்குகிறது. இதன் முக்கிய அறிகுறி நெஞ்சு வலி ஆகும். இந்த அறிகுறி ஒருவருக்கு உணரப்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.

Facebook Comments