இந்தியா சதி: பாக்., புலம்பல்

- in டாப் நியூஸ்
119
Comments Off on இந்தியா சதி: பாக்., புலம்பல்

கராச்சி: சீனா- பாகிஸ்தான் பொருளாதார விரைவு சாலை திட்டத்திற்கு எதிராக இந்தியா சதி செய்து வருவதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இக்பால் கூறியுள்ளார்.

இது தொடர்பாக குயிட்டா நகரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனா -பாகிஸ்தான் பொருளாதார விரைவு சாலை திட்டத்தை தோல்வியடைய செய்ய பாகிஸ்தானின் எதிரிகள் சதி திட்டம் தீட்டி வருகின்றனர். இந்த சதியை இந்தியா தீட்டி வருகிறது. ஆனால், மக்கள் ஆதரவுடன் பாகிஸ்தான் அந்த சதியை முறியடிக்கும்.

தனது சதி செயலுக்கு ஆப்கானிஸ்தானை இந்தியா பயன்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்.அமெரிக்காவும், எங்களை மிரட்டுவதை விட்டுவிட்டு, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் செய்த தியாகத்தை அங்கீகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்